பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் (Ultraviolette Automotive) என்ற மின்சார வாகனம் தயாரிக்கும் நிறுவனம் தயாரித்த எஃப்99 என்ற ரேசிங் வாகனம் இந்தியாவிலேயே அதிவேகமாக கால் மைல் தூரம் செல்லும் பைக் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
லோனாவாலாவில் உள்ள ஆம்பி பள்ளத்தாக்கில் நடைபெற்ற வேலி ரன் 2024 என்ற நிகழ்வில் இந்த வாகனம் பல சாதனைகளை முறியடித்திருக்கிறது.
கால் மைல் தூரத்தை வெறும் 10.712 வினாடியில் கடந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அதிவேகமாக இந்த தொலைவைக் கடந்த பைக்காக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளது.
இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப்களின் கூட்டமைப்பு (FMSCI) இந்த சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன்மூலம் சர்வதேச அளவில் சிறந்த நடுத்தர எடை கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகள் பட்டியலில் எஃப் 99 பைக் இடம்பெற்றுள்ளது.
இந்த சாதனையைப் படைக்கும்போது பைக்கை ஓட்டியவர் பலமுறை தேசிய சாம்பியனான அபிஷேக் வாசுதேவ் என்பது குறிப்பிடத்தக்கது.
எஃப் 99 பைக்கின் வெளிப்புறம் முழுமையாக கார்பன் ஃபைபரால் ஆனது. பேட்டரி பேக்கும் கார்பன் ஃபைபரால் ஆனது. இதன் எடை 180 கிலோகிலோ. இது 3 நொடிகளில் 0 முதல் 100 கிலோமீட்டர்/மணிநேரம் வேகத்தை அடையக் கூடியது மற்றும் 10 வினாடிகளில் 200 கி.மீ/மணி வேகத்தை அடையும் திறன் கொண்டது. இந்த திறந்தான் கால் மைல் தூரத்தை விரைவாக கடக்கும் சாதனைக்கு வித்திட்டுள்ளது.
அல்ட்ராவைலட் நிறுவனத்துக்கு எஃப் 99 மிகப் பெரிய சாதனையாகும். இதன் அதிகபட்ச வேகம் 265 கி.மீ/மணி என பைக் தெகோ வலைத்தளம் தெரிவிக்கின்றது.
அல்ட்ராவைலட் நிறுவனம் இந்தியாவிலேயே அதிவேகமாக செல்லக் கூடிய பைக்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எஃப் 99 சட்டப்பூர்வமாக சாலையில் ஓட்ட முடியாது. அல்ட்ரா வைலட் நிறுவனம் அடுத்த ஆண்டு சாலையில் ஓட்டும்படியான எஃப் 77 என்ற பைக்கை வெளியிட இருக்கிறது. இதன் ஆன் ரோட் விலை 2.99 லட்சமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/JailMathilThigil