ஜெயிலர் படத்தைப் பார்த்த பின் ப்ளூ சட்டை மாறனின் முதல் பதிவு.
Blue Sattai Maran: ஜெயிலர் படத்தை பற்றிய அனல் பறக்கும் விவாதங்கள் தான் தற்போது இணையத்தை சூழ்ந்து இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை உண்டாக்கி இருந்தது.
அதோடு மட்டுமல்லாமல் ரஜினி ரசிகர்கள் தன்னை மிரட்டுவதாகவும் ப்ளூ சட்டை மாறன் கூறியிருந்தார். ஆனாலும் விடாது கருப்பு என்பது போல தொடர்ந்து ரஜினியை சீண்டி வருகிறார் ப்ளூ சட்டை. இந்நிலையில் ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் சினிமா விமர்சகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.
அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படத்தை பற்றி என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருந்தது. அதன்படி ஜெயிலர் படத்தை பார்த்து விட்டு ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெல்சன் நம்ம பக்கம் தான் மகிழ்ச்சி என்று கமெண்டை பதிவிட்டு இருக்கிறார்.
அதாவது ரஜினியை நன்றாக நெல்சன் வச்சி செய்து விட்டார் என்பதை தான் குறிப்பிடும் விதமாக ப்ளூ சட்டை இவ்வாறு மறைமுகமாக பதிவிட்டு இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறு நெல்சனை ப்ளூ சட்டை மாறன் வம்புக்கு இழுத்து இருக்கிறார். மேலும் தனது யூடியூப் சேனலில் விரைவில் ஜெயிலர் படத்தை பற்றி மோசமான விமர்சனத்தை தான் ப்ளூ சட்டை கொடுக்க இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெயிலர் படத்தால் இப்போது ப்ளூ சட்டை மாறன் நெல்சனை தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்து விட்டார். அதோடு மட்டுமல்லாமல் விஜய்யின் பக்கம் தான் நெல்சன் என விஜய் ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர். ஆனால் பொதுவாக ஜெயிலர் படத்தின் முதல் பாதி மிகவும் பிரமாதமாக இருப்பதாகத்தான் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.
மேலும் இரண்டாம் பாதியில் சில தொய்வு இருந்தாலும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ப்ளூ சட்டை மாறன் ரஜினிக்கு எதிராக உள்ளவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வேண்டுமென்றே திட்டமிட்டு ஜெயிலர் படத்தை மோசமாக விமர்சித்து சதி செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகிறது.