இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். ஜெய்லர் திரைப்படம் இதுவரை உலக அளவில் 300 கோடி வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்பட எடிட்டர் நிர்மல் அளித்துள்ள பேட்டியில் கிளைமேக்ஸ் பற்றி ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். தற்போது படத்தில் இருக்கும் கிளைமேக்ஸ் காட்சி முடிந்த பிறகு ஒரு மாசான சீன் ஒன்று இருந்தது. அதை சென்சாரில் நீக்கி விட்டார்கள். அது மட்டும் இருந்திருந்தால் பத்து நொடிகள் வரும் அந்த காட்சி இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.