குக் வித் கோமாளி பிரபலமும் இளம் நடிகையுமான தர்ஷா குப்தா உள்ளிட்ட பலர் சாக்ஷி அகர்வாலின் இந்த லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோவுக்கு லைக் போட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை திருப்பி உள்ளது.
ரூல்ஸ் ரஞ்சன் படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய ஒரு அருமையான தெலுங்கு பாடலான சமோஹனுடா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் சாக்ஷி அகர்வால்.
ரீல்ஸ் போடும் இளம் நடிகைகள்: பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோ பிரபலங்களும், சீரியல் நடிகைகளும் கோலிவுட்டின் இளம் நடிகைகளும் இன்ஸ்டாகிராமில் வெறும் போட்டோக்களை மட்டும் பதிவிடாமல் அடிக்கடி ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில் தங்களின் நடன ரீல் வீடியோக்களையும் வெளியிட்டு ஃபாலோயர்களை அதிகரித்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை சாக்ஷி அகர்வால் தமிழில் ராஜா ராணி, காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2 மில்லியன் பேர் ஃபாலோயர்களாக உள்ள நிலையில், தொடர்ந்து ரசிகர்களை கவரும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் வொர்க்கவுட் பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
சிகப்பு சேலை கட்டிக்கிட்டு டான்ஸ்: ஃபிட்னஸ் ஃப்ரீக்கான சாக்ஷி அகர்வால் இடுப்பில் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்துக் கொண்டு ரசிகர்களை மிரட்டி வரும் நிலையில், மாடர்ன் உடைகளை தவிர்த்து விட்டு சிகப்பு சேலை கட்டிக் கொண்டு ஆடி மாத ஸ்பெஷல் போல தெலுங்கு பாட்டு ஒன்றுக்கு போட்டுள்ள குத்தாட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது. ஸ்ரேயா கோஷல், அம்ரீஷ் பாடிய ரூல்ஸ் ரஞ்சன் திரைப்படத்தில் இடம்பெற்ற சமோஹனுடா பாடலுக்கு சிரித்தபடியே செம டான்ஸ் போட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.
கேமராமேன் பயங்கரமா ஆடுறாரே: நடிகை சாக்ஷி அகர்வாலை விட அவர் நடனமாடும் வீடியோவை எடுத்த கேமராமேன் சூப்பரா ஆடுகிறார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், இடுப்பில் சங்கிலியை எல்லாம் போட்டுக் கொண்டு ரசிகர்களை இம்சித்து வரீங்களே சாக்ஷி என ஜொள்ளு கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.
மேலும், சாக்ஷி அகர்வாலின் இன்ஸ்டா ரீல் வீடியோவுக்கு கீழ் அவரது அழகையும் நடனத்தையும் வர்ணித்து பலவிதமான கமெண்ட்டுகள் குவிந்து வருவது போலவே படுமோசமான ஆபாச கமெண்ட்டுகளும் எல்லை மீறி இடம்பெற்றுள்ளன.