ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார்.
அஷ்வினின் இந்த திடீர் ஓய்வு முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர், அஷ்வினின் ஓய்வு முடிவு குறித்து பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "இந்தத் தொடர் முடிந்த பிறகு இந்திய அணிக்காக விளையாட இருக்க மாட்டேன் என்று அஷ்வின் ஓய்வு முடிவை கூறியிருக்கலாம்.
2014 –15 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் மூன்றாவது போட்டியில் தோனி செய்ததை போலவே அவரும் செய்திருக்கிறார். தேர்வாளர்கள் காரணங்களை வைத்து பல்வேறு வீரர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஏதேனும் ஒரு வீரர் காயமடைந்தால் மற்ற வீரர் விளையாட வேண்டும். குறிப்பாக சிட்னி மைதானம் ஸ்பின்னர்களுக்கு நிறைய உதவி செய்யும்.
அதனால் இந்தப் போட்டியில் அஷ்வின் விளையாடக்கூடும். ஆனால் அவர் வாய்ப்பை தற்போது தவற விட்டிருக்கிறார். பொதுவாக நீங்கள் இது போன்ற முடிவை தொடரின் இறுதியில் அறிவிக்க வேண்டும்.
பாதியில் அறிவிப்பது சரியானதல்ல. அஷ்வின் நாளை வீடு திரும்புவதாக ரோஹித் சொன்னார். எனவே சர்வதேச வீரராக அஷ்வினின் வாழ்க்கை முடிந்திருக்கிறது. அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாடலாம்" என்று கூறியிருக்கிறார்.