BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 19 December 2024

What to watch on Theatre and OTT: விடுதலை, Mufasa, Rifle, Marco, ED; இந்த வாரம் கொண்டாட்டம் தான்!

விடுதலை பாகம் 2 (தமிழ்)

விடுதலை பாகம் - 2

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. முதல் பாகத்தில் குமரேசன் (சூரி), வாத்தியாரை (விசே) கைது செய்துவிட்டார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் போராட்டக்காரராக இருக்கும் வாத்தியர் யார், கைதான அவர் என்ன ஆனார் என குமரேசன் வாத்தியாரைப் புரிந்து கொள்வதன் வழியே மக்களுக்காகப் போராடுபவர்களை அதிகாரம், ஆதிக்கம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொள்வதாக இரண்டாம் பாகத்தின் கதை விரிகிறது. ஆழமான அரசியல் பேசும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான இது இன்று (டிச 20) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 

Rifle Club (மலையாளம்)

ஆஷிக் அபு இயக்கத்தில் திலேஷ் போத்தன், அனுராக் காஷ்யப், வாணி, தர்ஷனா, சுரபி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Rifle Club’. மலையில் மிருகங்களை வேட்டையாடும் இரண்டு கேங்குகளுக்கு இடையே நடக்கும் ரைஃபில் ஆக்‌ஷன் திரில்லர் கதை இது. துப்பாக்கிகள் வெடிக்கும் இத்திரைப்படம் நேற்று (டிச 19) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 

ED - Extra Decent (மலையாளம்)

ஆமிர் பள்ளிக்கல் இயக்கத்தில் சுரஜ், கிரேஸ், ரஃபி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ED - Extra Decent’. சாதாரண காமெடி கேரக்டராக இருக்கும் சுரஜ், குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் வேடிக்கையானவராகவே இருக்கிறார். நாளுக்கு நாள் அவருக்குள் இருக்கும் வில்லன் கேரக்டரை தெரியவர, அவர் எப்படிப்பட்டவர் என்பதை குடும்பத்தினர் ஆச்சரியத்துடனும், பயத்துடனும் தெரிந்து கொள்வதே இதன் கதைக்களம். காமெடி, ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது இன்று (டிச 20) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 

Marco (மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்)

Marco

ஹனிஃப் அதேனி இயக்கத்தில் சூரியின் ‘கருடன்’ படத்தில் வில்லனாக நடித்த உன்னி முகுந்தன், யுக்டி, கபீர், சித்திக், அன்சன், ஜெகதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Marco’. தங்கக் கடத்தல் வியாபாரத்தை தலைமுறை தலைமுறைகளாகச் செய்து வரும் குடும்பத்திற்கு ஒரு மாஃபியா கும்பல் பிரச்னைகள் கொடுக்கிறது. அந்த மாஃபியா கும்பல் யார், குடும்பத்தில் இருக்கும் ஒருவரா, இல்லை வெளியில் இருப்பவர்களா என்பதைக் கண்டுபிடித்து தங்கக் கடத்தலை தன் வசமாக்கத் துடிக்கிறார் உன்னி முகுந்தன். ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது இன்று (டிச 20) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 

Mufasa: The Lion King (ஆங்கிலம்)

Mufasa: The Lion King

பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘The Lion King’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் அனிமேஷின் திரைப்படம் ‘Mufasa: The Lion King’. வழித் தவறிக் காட்டில் திரியும் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த முஃபாசா சிங்கம், காட்டில் ஹக்குனா மட்டாட்ட நண்பர்களுடன் சேர்ந்து வளர்கிறது. இதற்கிடையில் காட்டை ஆளத்துடித்துக் கொண்டிருக்கிறது இரண்டு சிங்கங்கள். முஃபாசா தன்னைத் தானே கண்டறிந்து, காட்டைக் காக்கும் போர் விராராக மாறினாரா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் இன்று (டிச 20) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 

UI (கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி)

UI

உபேந்திரா இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘UI’. ரீஷ்மா, முரளி, அச்யூத் குமார், ரவி ஷங்கர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சயின்ஸ் - பிக்‌ஷன் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது இன்று (டிச 20) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 

Bachhala Malli (தெலுங்கு)

Bachhala Malli

சுப்பு இயக்கத்தில் அல்லரி நரேஷ், அமிர்தா, ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bachhala Malli’. ஆக்‌ஷன் திரைப்படமான இது இன்று (டிச 20) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 

Vanvaas (இந்தி) 

Vanvaas

அனில் ஷர்மா இயக்கத்தில் நானா படேகர், உட்கர்ஷ் ஷர்மா, சிம்ரட், ராஜ்பல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Vanvaas’. குடும்பத்தில் நடந்த உருக்கமான கதையைச் சொல்லும் இத்திரைப்படம் திரைப்படமான இது இன்று (டிச 20) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 

இந்த வார ஓடிடி ரிலீஸ்...

Zebra - Aha

Moonwalk - JioCinema

Zebra, Moonwalk

What If...?: Season 3 - Disney+Hotstar

Girls Will Be Girls - Amazon Prime Video

What If...?: Season 3, Girls Will Be Girls

Virgin River Season 6 - Netflix

Virgin River Season 6 , Yo Yo Honey Singh: Famous

Yo Yo Honey Singh: Famous - Netflix

Twisters - JioCinema

The Six Triple Eight - Netflix

இந்த வாரம் நீங்கள் பார்க்கப் போகும் திரைப்படம் எது என்பதைக் கமெண்டில் தெரிவிக்கவும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies