BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 9 October 2024

Ratan TATA: ரத்தன் டாடா மறைவு.. அரசியல், சினிமா பிரபலங்களின் உருக்கமானப் பதிவுகள்!

இந்தியாவின் மிக முக்கியப் பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த சில வாரங்களாக உடல்நலமில்லாமல் இருந்தார். அதனால், மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு வயதுமூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரத்தன் டாடா மறைவு குறித்து பிரதமர் மோடி, `` ரத்தன் டாடா தொலைநோக்கு சிந்தனைக் கொண்ட வணிகத் தலைவர். இரக்கமுள்ள ஆன்மா கொண்ட அசாதாரண மனிதர். இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றிற்கு நிலையான தலைமையேற்றவர். அதே நேரத்தில், அவர் தனது பணிவு, இரக்கம் மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பலரில் தன்னையே நேசித்தார்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ``இந்திய தொழில்துறையின் தலைவரும், இந்தியாவின் பெருநிறுவன நிலப்பரப்பை வடிவமைத்த பத்ம விபூஷன் ரத்தன் டாடாவின் மறைவால், காங்கிரஸ் கட்சி ஆழ்ந்த வருத்தமடைந்துள்ளது. அவரது நேர்மையும், கருணையும் வருங்கால சந்ததியினர், தொழில்முனைவோர் மற்றும் இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிக்கிறது. நமது பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு அவர் செய்த மகத்தான பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட இந்திய தொழில்துறையின் முன்னோடி அவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ``ரத்தன் டாடாவின் மறைவால், தேசத்தைக் கட்டியெழுப்பும் கார்ப்பரேட் வளர்ச்சியை, நேர்மையுடன் சிறந்து விளங்கும் ஒரு சின்னத்தை இந்தியா இழந்துவிட்டது. பத்ம விபூஷண் மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்ற அவர், சிறந்த டாடா-வின் மரபை முன்னெடுத்துச் சென்று, உலக அரங்கில் பிரம்மிக்க வைத்திருக்கிறார். அனுபவமிக்க தொழில் வல்லுநர்களையும், இளம் மாணவர்களையும் ஒரே மாதிரியாக ஊக்கப்படுத்தினார். அவரின் மக்கள் தொண்டு சேவை விலைமதிப்பற்றது" எனக் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ``நாடு ஒரு சிறந்த, திறமையான மகனை இழந்துவிட்டது. முப்பது ஆண்டுகளாக அவரைத் தெரியும். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். தற்போது இந்தியாவின் சிறந்த மகனின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies