பால் மற்றும் சிறுதானியங்களை மதிப்புக்கூட்ட தெரிந்து கொண்டால் அதுசார்ந்த உணவுத் தொழில்களில் வெற்றிகரமாக வலம் வர முடியும். மதிப்புக் கூட்டுதல் எனும் தொழில்நுட்பம் தெரிந்துகொண்ட பலரும் வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக உருவாகியுள்ளனர்.
மதிப்புக் கூட்டுதல் என்னும் கலை ஒரு விவசாயியின் வருமானத்தை அதிகரிக்கிறது. பொருளை உற்பத்தி செய்பவராக மட்டும் இல்லாமல் அதை நல்ல லாபத்துடன் விற்பனை செய்ய மதிப்புக் கூட்டல் உதவுகிறது. இதன் மூலம் விவசாயிகள் மற்றும் விவசாயப் பொருள்களை விற்பனை செய்யும் தொழில்முனைவோர்கள் நல்ல வருமானத்துடன் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்.
மதிப்புக்கூட்டிய பொருள்களை நீண்ட நாட்களுக்கு வைத்து விற்பனை செய்ய முடியும். இதோடு நல்ல வருமானமும் கிடைக்கிறது. விவசாயிகள் மட்டுமல்ல, தொழில்முனைவோரும் மதிப்புக் கூட்டிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றி தொழில் செய்து, லாபம் பார்க்கலாம். அதற்கு, பசுமை விகடன் முன்னெடுக்கும் இந்த மதிப்புக்கூட்டல் பயிற்சி பெரிய அளவில் கை கொடுக்கும்.
பசுமை விகடன் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து ``சிறுதானிய ஐஸ்க்ரீம், சிறுதானிய குல்பி, ரோஸ் மில்க், பாதாம் பால், பனீர் தயாரிப்பு... லாபம் கொடுக்கும் மதிப்புக்கூட்டல்” என்ற நேரடி பயிற்சி வகுப்பை அக்டோபர் 18-ம் தேதி நடத்துகிறது.
மதிப்புக்கூட்டலுக்கு வழிகாட்டும் விதமாக 2 லட்சம் ரூபாய் முதலீட்டிலிருந்து 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து வருமானம் ஈட்டுவதற்கான வழிகாட்டல்கள் இந்த மதிப்புக் கூட்டல் பயிற்சியில் கிடைக்கும்.
சிறுதானிய ஐஸ்க்ரீம், சிறுதானிய குல்பி, ரோஸ் மில்க், பாதாம் பால், பனீர் போன்றவற்றை பால், சிறுதானியங்களைப் பயன்படுத்தித் தயாரிப்பது எப்படி என்பது குறித்து பயிற்சியில் சொல்லித் தரப்படும். அதைச் சந்தைபடுத்துவதற்கான வழிகாட்டல்களும் கிடைக்கும்.
நாள்: 18-10-24 (வெள்ளிக்கிழமை).
நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி,
அலமாதி/கோடுவள்ளி (சென்னையில் இருந்து 27 கி.மீ), திருவள்ளூர் மாவட்டம்.
பயிற்சிக் கட்டணம் ரூ.1,200
(பயிற்சியில் நோட்பேட், பேனா, தேநீர், சான்றிதழ், மதிய உணவு வழங்கப்படும்).
சிறப்பம்சங்கள்
* குறைந்த முதலீட்டில் சிறுதானிய ஐஸ்க்ரீம், குல்பி தயாரிக்கும் முறைகள்.
* பாலை மதிப்புக்கூட்டி ரோஸ் மில்க், பாதாம் பால், பனீர் தயாரிக்கும் முறைகள்.
* சிறுதானிய ஐஸ் க்ரீம், குல்பி, பாதாம் பால், ரோஸ்மில்க் ஆகியவற்றுக்கான சந்தை வாய்ப்புகள்.
* உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள மதிப்புக்கூட்டல் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள்.
* பிஸினஸ் இன்குபேஷனில் உறுப்பினர் ஆவதற்கான வழிகாட்டல்கள்.
இன்னும் இன்னும்...
பயிற்சிக் கட்டணம் ரூ.1,200 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும். கூகுள் பே, அமேசான் பே, போன் பே. பே.டி.எம். போன்ற UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்.
கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் உங்கள் முகவரியை
99400 22128 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு,
செல்போன்: 99400 22128