மும்பை - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் கடந்த 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரெஸ்ட் ஆப் இந்தியா மற்றும் ரஞ்சி சாம்பியனான மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி சார்பாக களமிறங்கிய சர்ஃபராஸ் கான் 286 பந்துகளில் 25 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என ஆட்டமிழக்காமல் 222 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இதன் மூலம் இரானி கோப்பை வரலாற்றில் இராட்டை சதம் அடித்த முதல் மும்பை வீரர் என்ற சாதனையை சர்ஃபராஸ் கான் படைத்திருந்தார்.
இந்நிலையில் தனது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசியிருந்த சர்பராஸ் கான், "என் தம்பி முஷீர் கான் இந்த தொடரில் விளையாடி இருந்தால் எனது அப்பா மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார். ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கு விபத்து ஏற்பட்டு விட்டது. அதனால் இந்தப் போட்டி எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான ஒன்றாக இருந்தது. நான் இந்தப் போட்டியில் களமிறங்கும் முன்னரே நிச்சயம் இரட்டை சதம் அடிப்பேன் என்று எனது குடும்பத்தாரிடமும், எனது சக அணி வீரர்களும் உறுதி அளித்திருந்தேன்.
அந்த வகையில் இந்த போட்டியில் எனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த இரட்டை சதத்தில் 100 எனக்கு மீதி100 என் தம்பிக்கு என சர்ஃபராஸ் கான் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs