நாணயம் விகடன் நடத்தும் ‘ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!’ என்கிற நேரடிப் பயிற்சி வகுப்பு சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி 2024 அக்டோபர் 5, சனிக்கிழமை, காலை 9.30 மணி முதல் மாலை
5 மணி வரை நடக்கிறது. பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் பயிற்சி அளிக்கிறார். இதற்கான கட்டணம் நபருக்கு ரூ.6,000 ஆகும்.
பங்கு முதலீட்டுக் கலவையை எப்படி சிறப்பாக உருவாக்குவது என ஏ.கே.பிரபாகர் விளக்குகிறார். ஆனந்த் ரதி, ஐ.டி.பி.ஐ கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தை ஆராய்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர் ஏ.கே.பிரபாகர். பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனையில்
30 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர் இவர்.
முன்பதிவு செய்ய: https://bit.ly/NVSharePortfolio