இன்றைய நவீன யுகத்தில் அமைதியைத் தேடும் பலரும் தற்சார்பு வாழ்வியலைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். இயற்கையை பாதிக்காத வகையிலான குடியிருப்பில் வசிப்பதும், தாங்கள் வசிக்கும் பகுதிக்கும் அங்குள்ள தட்ப வெப்பநிலைக்கு ஏற்ற பயிர்களைப் பயிர்செய்து, தங்கள் தேவைகளை வாழும் இடத்திலேயே பூர்த்திசெய்துகொள்வதுமான எளிய வாழ்க்கைதான் தற்சார்பு வாழ்க்கை முறையாக கருதப்படுகிறது. 'இந்த தற்சார்பு வாழ்க்கை முறையை எப்படி வாழ்வது?' என்று விளக்கும் வகையில், தன் நிலத்தில் ஒரு மாடலை உருவாக்கியிருக்கிறார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சாந்த ஷீலா நாயர்.
கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என மூன்று முதலமைச்சர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சாந்த ஷீலா நாயர் 42 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். குறிப்பாக ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மழை நீர் சேகரிப்புத் திட்டத்துக்கு தலைமை தாங்கினார். தன் பணிக்காலத்தில் தற்சார்பு வாழ்வியலுக்கான பல திட்டங்களை உருவாக்கிய இவர், அப்போது சொன்னவற்றையெல்லாம் தற்போது தன்னுடைய நிலத்தில் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார் என்பது பிரமிக்க வைக்கிறது. Epic (Echo Park And information Centre) என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த தோட்டம் குறித்து விளக்குகிறது இந்த காணொலி....