16 வயதில் 'அரவிந்தன்' திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான யுவன் சங்கர் ராஜா, திரையுலகில் 26 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
2000 முதல் 2012 வரைக்குமான தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் முக்கிய பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறது.
தீம் மியூசிக் என்றாலும் சரி, காதல் தோல்வி பாடல்களானாலும் சரி 90ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது யுவனின்தான்.
பின்னணி இசை என்றால் சொல்லவே தேவையில்லை. 'மன்மதன்', 'காதல் கொண்டேன்', 'பில்லா', 'மங்காத்தா' எனப் பல வரிசைக் கட்டி நிற்கின்றன. அதனால் 'BGM' கிங் என்று அழைக்கின்றனர்.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் தன் குரலால் தனி முத்திரை பதித்த யுவனை தங்கள் வலிகளை மறக்கடிக்கச் செய்யும் டாக்டர் என ரசிகர்கள் செல்லமாக அழைப்பதுண்டு.
சினிமாத்துறையில் யுவனின் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தைச் சத்யபாமா பல்கலைக் கழகம் வழங்கி கௌரவித்திருக்கிறது.
80'ஸ், 90ஸ், 2k கிட்ஸ் எனப் பல தலைமுறையினரும் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்களாக இருப்பது யுவனின் தனிச்சிறப்பு.
அந்த வகையில் இன்றளவும்கூட காதல் வளர்தேன், நினைத்து நினைத்து, கண்பேசும் வார்த்தைகள் போன்ற யுவனின் பாடல்களைக் குறிப்பிட்டு Dr. யுவனின் prescription என்று இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடுவது உண்டு.
இவரும் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள் காலத்திற்கும் கொண்டாடப்படும்.
தற்போது 'Goat' படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து சில படங்களில் இசையமைக்க கமிட்டாகி இருக்கிறார்.
இசையால் நம்மை எப்போதும் மகிழ்வித்து கொண்டிருக்கும் யுவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.