BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 30 August 2024

``என் உயிர் பிரிகிறபோதும் காட்பாடி என சொல்லிக்கொண்டுதான் போகும்" - அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்து பொன்னையாற்றின் குறுக்கேயுள்ள சித்தூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உயர்மட்ட பாலத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ``என்னைப் போற்றுகிறவர்களும், திட்டுகிறவர்களும் இந்த பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். நல்லவர்களும், வல்லவர்களும்கூட இதில்தான் பயணிக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்

அனைவரையும் இந்த பாலம் சுமப்பதைபோல நான் தாங்கிக் கொண்டிருக்கிறேன். என் மக்கள் 50 வருடம் என்னை இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக வைத்திருக்கிறார்கள். என்னுடைய தொகுதி தான் எனக்கான `திருக்கோயில்’. நீங்கள் தான் எனது `குலதெய்வம்’. நீங்கள் தான் எனது வழிபாட்டுக்குரியவர்கள்.

இந்த பொன்னையாற்றுப் பாலம் நான் இல்லாவிட்டாலும் அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பிறகும் `இது துரைமுருகன் கட்டிக்கொடுத்த பாலம்’ எனப் பெயர் சொல்லும். உயிர் உள்ளவரை உங்களுக்கு அடிமையாக இருப்பேன். என் உயிர் பிரிகிறபோதுகூட `என் தொகுதி காட்பாடி’ என பெயரைச் சொல்லிக்கொண்டுதான் போகும். எப்போதும் இந்த காட்பாடி தொகுதிக்கு சேவகனாக இருப்பேன்’’ என்றார் நெகிழ்ச்சியோடு.

அமைச்சர் எ.வ.வேலு

இதையடுத்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு ``இந்த பாலத்துக்கு `தளபதி மு.க.ஸ்டாலின்’ என பெயர் வைத்தால் மிகப் பொருத்தமானதாகவும், நன்றிக்கடனாகவும் இருக்கும். முதல்வர் ஸ்டாலினிடம் கலந்தாலோசிக்காமல் நானும், அண்ணன் துரைமுருகனும் சேர்ந்து பொன்னை உயர்மட்ட பாலத்துக்கு `தளபதி ஸ்டாலின்’ என பெயர் சூட்டுகிறோம்’’ என்றார்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies