‘கிஸ்மிஸ்’ என்னும் செல்லப்பேரால அழைக்கப்படுற உலர் திராட்சை, மருத்துவ குணங்களை வாரி வழங்குறதுல வள்ளல்! இதோட பலன்கள் பற்றி சொல்கிறார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்.
இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்புன்னு நம்ம உடம்புக்கு தேவையான எக்கச்சக்க மினரல்ஸ் இதுல இருக்கு.
ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கணும்னா தினமும் உலர் திராட்சை சாப்பிடுங்க.
எலும்புகளுக்கு வலிமை தர்ற 'போரான்' மினரலும் உலர் திராட்சையில் இருக்கு. ஸோ, இது எலும்புகளை வலுப்படுத்தி மூட்டு சார்ந்த பிரச்னைகளை தள்ளிப்போடும்.
உங்க கூந்தலும், சருமமும் பளபளன்னு ஹெல்தியா இருக்கணும்னா தினமும் உலர் திராட்சை சாப்பிடணும்.
நார்ச்சத்து அதிகமா இருக்கிறதால செரிமான சக்தியை அதிகமாக்குறதுலயும் உலர் திராட்சை செம சப்போர்ட்டிவ்.
உலர் திராட்சையைத் தண்ணீர்ல ஊற வெச்சு தினமும் சாப்பிட்டு வந்தா, மலச்சிக்கலுக்கு தனியா மாத்திரை, மருந்து சாப்பிடணும்கிற அவசியமே வராது. ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி ஐஞ்சாறு உலர் திராட்சையைச் சாப்பிட்டு பால் குடிச்சிட்டா, மறுநாள் காலையில மலம் சுலபமா வெளியேறும்.
உடம்பு வெயிட் போடணும்னு நினைக்கிறவங்க, தினமும் கொஞ்சம் உலர் திராட்சைகளோடு பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டா போதும்.
வறட்டு இருமல், நாக்கு உலர்ந்து போதல், அதிக தாகம் மாதிரியான பிரச்னைகள் இருக்கிறவங்க உலர் திராட்சையைத் தண்ணீர்ல ஊற வெச்சு குடிக்கலாம்.
உலர் திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமா இருக்கிறதால, நோய்கள் வராம தடுத்திடும்.
வயிற்றுப்போக்கு இருக்கிறப்போ, சீரகம் சேர்த்துக் கொதிக்க வைச்ச தண்ணீர்ல சில உலர் திராட்சைகளை ஊறவைச்சு சாப்பிடலாம்.
தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வந்த, உயர் ரத்த அழுத்த நோயாளிகளோட ரத்த அழுத்தம் சீரடைந்ததா ஆய்வுகள் சொல்லுது. குடல் புற்றுநோயைத் தடுக்கிற நலக்கூறுகள் உலர் திராட்சையில் இருக்கிறதாகவும் ஆய்வுகள் சொல்லுது. இதயநோய் ஏற்படுவதைத் தடுக்கும் உலர் திராட்சையோட உட்கூறுகள் பற்றி ஆய்வுகள் நடந்திட்டிருக்கு.
டயபடீஸ் இருக்கிறவங்களைத் தவிர, மத்தவங்க தினமும் உலர் திராட்சை சாப்பிட்டா ரொம்ப நாள் ஹெல்தியா இருக்கலாம்.!
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41