ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் 'பாபநாசம்', ஜூலை 3ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான மலையாள படம் 'த்ரிஷ்யம்'. விமர்சகர்கள் மத்தியிலும், வசூலிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் பெற்றது.
தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக்காகி விட்டது. தமிழில் கமல், கெளதமி, சார்லி, கலாபவன் மணி உள்ளிட்ட பலர் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கினார். 'பாபநாசம்' என பெயரிடப்பட்ட இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக இருந்தது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு 'U' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
சரியான தேதியில் வெளியிட வேண்டும் என்ற ஆலோசனையில் ஈடுபட்டு, இறுதியாக ஜூலை 3ம் தேதி 'பாபநாசம்' வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.