கோவா: மத்திய அரசு தனக்கு வழங்கிய சினிமா பிரபலம் 2014 விருதினை திரைத் துறைக்கும் தனது ரசிகர்களுக்கும் சமர்ப்பிப்பதாக ரஜினிகாந்த் கூறினார். கோவாவில் நடைபெறும் 45வது சர்வதேச திரைப்பட விழாவில், மத்திய அரசு வழங்கிய நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகர் 2014 என்ற உயர்ந்த விருதினைப் பெற்றுக் கொண்ட ரஜினி, அதற்கு நன்றி தெரிவித்து சுருக்கமாக பேசியதாவது: கோவா ஆளுநர் அவர்களே, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அருண் ஜெட்லி அவர்களே, என் அண்ணா அமிதாப்ஜி அவர்களே.. இந்த விருது எனக்கு பெருமையாகவும் கவுரவமாகவும் உள்ளது. விருதினை அளித்த மத்திய அரசுக்கும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கும் நன்றி.
விருதுக்காகத்தான் மேடைக்கு வந்தேன். என்ன பேசுவது என்ற திட்டம் ஏதுமில்லை. அமிதாப் பச்சன் இத்தனை அருமையாகப் பேசிய பிறகு நான் என்ன பேசுவது? இந்த விருதினை எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுதியவர்கள், சக கலைஞர்கள் மற்றும் என் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றி," என்றார்.