மும்பை: சல்மான் கானும், ஷாருக்கானும் ஒரு இரவு முழுவதும் தன்னை தூங்கவிடவில்லை என்று நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார். சல்மான் கானும், ஷாருக்கானும் எலியும், பூனையும் போன்றவர்கள் என்பவது அனைத்து உட்காரர்களுக்கும் தெரியும். அதே சமயம் சல்மானுக்கும் ஆமீர் கானுக்கும் ஒத்துப் போகும். ஆமீருக்கும், ஷாருக்கிற்கும் ஏழாம் பொருத்தம் தான்.
இந்நிலையில் ஷாருக்கான் சல்மான் கானின் தங்கை அர்பிதாவின் திருமணத்திற்கு முந்தைய நாள் அவர்கள் இடத்திற்கு சென்றார். அவரும், சல்மானும் ஆளுக்கொரு பக்கம் அர்பிதாவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பார்த்த பலரின் கண்களில் இருந்து இன்னும் வியப்பு அகன்றபாடில்லை. சல்லுவும், ஷாருக்கும் நண்பர்களாகிவிட்டதை அவர்கள் டெல்லியில் இருந்த ஆமீர் கானுக்கு ஃபேஸ்டைம் மூலம் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் ஆமீர் கானுடன் இரவு முழுவதும் பேசியுள்ளனர். இந்த ஷாருக்கும், சல்மானும் என்னை இரவு முழுவதும் தூங்கவிடாமல் பேசிக் கொண்டிருந்தனர் என்று ஆமீர் கானும் தெரிவித்துள்ளார்.