கோவா: மத்திய அரசு தரும் விருது எனக்கு பெரிய கவுரவம். மகிழ்ச்சியாக உள்ளது என்று ரஜினிகாந்த் கூறினார். கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய அரசின் சிறந்த இந்திய திரையுலக பிரமுகருக்கான விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது.
இந்த விழாவில் பங்கேற்க தன் மனைவியுடன் கோவா வந்தார் ரஜினிகாந்த். அவர் தனியார் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "மத்திய அரசு அளிக்கும் இந்த விருது எனக்கு பெரிய கவுரவம், பெருமை," என்றார். மீண்டும் அமிதாப் பச்சனுடன் நடிக்க வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு, "அதை அமித்ஜியிடம்தான் கேட்க வேண்டும். அவருக்கு ஓகேயென்றால் நடிப்போம்," என்றார். லிங்கா வெளியீடு பற்றிக் கேட்டபோது, "டிசம்பர் 12-ம் தேதி படம் வெளியாகும்" என்றார் ரஜினி.