கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படமான 'லிங்கா, டிக்கெட் முன்பதிவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய சாதனைப் படைத்துள்ளது. ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் லிங்கா தேதி திரைக்கு வருகிறது.
லிங்கா இந்நிலையில் 'லிங்கா' டிக்கெட் புக்கிங் சென்னை உள்பட பல நகரங்களில் நேற்ரு மாலை தொடங்கியது. சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸ் தங்களது தியேட்டர்களில் வெள்ளிகிழமை மட்டும் 89 காட்சிகளை லிங்காவுக்கு ஒதுக்கியுள்ளது. இது முன் எப்போதும் இல்லாத காட்சி எண்ணிக்கை ஆகும். 'லிங்கா' டிக்கெட் புக்கிங் ஆரம்பிப்பதை அறிந்துகொண்ட ரஜினி ரசிகர்கள் ஒரே நேரத்தில் சத்யம் இணைய தளத்தை முற்றுகை இட்டதால் சில மணி நேரங்கள் சத்யம் இணையதளம் முடங்கிவிட்டது. பின்னர்தான் புக்கிங் ஆரம்பமானது. புக்கிங் தொடங்கிய 30 நிமிடங்களில் மூன்று நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தலா 89 ஷோக்களை சத்யம் ஒதுக்கியுள்ளது. அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்தன. அடுத்து 15 முதல் 18-ம் தேதி வரையிலான காட்சிகளுக்கு வேகமாக டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. சென்னையில் உள்ள மற்றொரு தியேட்டரான தேவி ஒரு நாளைக்கு 15 காட்சிகளை 'லிங்கா'வுக்கு ஒதுக்கியுள்ளது. தேவியிலும் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்துவிட்டன. தேவியில் வெள்ளிக்கிழமைக்கான ஒரு நாள் டிக்கெட் புக்கிங் மூலம் மட்டும் 15 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது. மூன்று நாட்களுக்கு ரூ 45 லட்சத்தை அந்த அரங்கம் குவித்துள்ளது. மாயாஜால் திரையரங்கம் ஒரு நாளைக்கு 100 ஷோக்களை லிங்காவுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை புக்மை ஷோ தளம் மூலம் ரிசர்வ் செய்து வருகிறது. இன்றுதான் மாயாஜால் புக்கிங்கை ஆரம்பித்தது. மாலைக்குள் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகளை மாயாஜால் விற்றுள்ளது. வட சென்னைப் பகுதியில் பிரபலமான அபிராமி மெகா மாலில் உள்ள நான்கு அரங்குகளிலும் நாளொன்றுக்கு தலா 16 காட்சிகள் லிங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கும் முதல் 5 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஐநாக்ஸ், கமலா, ஆல்பர்ட், சாந்தி, உதயம் போன்ற காம்ளக்ஸ்களிலும் இதே நிலைதான். இந்த முன்பதிவு மூலம் மட்டுமே இதுவரை ரூ 7 கோடியை சென்னையில் மட்டுமே லிங்கா வசூலித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இது தவிர, ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிகளாக நள்ளிரவு, அதிகாலை, மற்றும் காலை 8 மணிக்கு நடக்கும் காட்சிகளுக்கான கட்டண வசூல் தனிக் கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது.