திருச்சி: விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையால் திருச்சியில் லிங்கா படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எந்ததெந்த தியேட்டர்களில் படம் ரீலஸ் ஆகிறது என்று தெரியாமல் தவிக்கும் ரசிகர்கள், மதியத்துக்குள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படம் தமிழகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ளது. ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை நாளை வெளியிட முடிவு செய்யப்பட்டு, தமிழகத்தின் பெரும்பாலானப் பகுதிகளில் தியேட்டர்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டது.

லிங்கா படம் வெளியாகும் தியேட்டர்களில், பேனர் கட்டுவது, கட்டவுட் வைப்பது உள்ளிட்டப் பணிகளில் ரஜினி ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திருச்சி மாநகர ரஜினி ரசிகர்கள் மட்டும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். திருச்சி மாநகரில் மட்டும் படம் ரிலீசாகும் தியேட்டர்கள் இன்னும் முடிவாகாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையின் காரணமாக நாளிதழ்களில் இன்று வெளியாகியுள்ள லிங்கா பட விளம்பரத்திலும் தியேட்டர்கள் பற்றிய அறிவிப்பில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இன்று மதியத்துக்குள் படம் வெளியாகும் தியேட்டர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் சாலை மறியல் உள்ளிட்டப் போராட்டங்களில் ஈடுபடவும் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.