பாலிவுட் பாஷா ஷாருகான் மீண்டும் ஒரு பிரச்சினையில் சிக்கி உள்ளார். நடிகர் ஷாருகானின் வீடு மும்பையின் மன்னாத் பகுதியில் உள்ளது. சமீபத்தில் அறியப்படாத காரணங்களுக்காக மன்னாத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்குள்ளே அனுமதிக்கபடாமல் பாதுகாவலர்களால் தள்ளப்பட்டார்.பிடிவாதமாக அவரது வீட்டுக்குள் அவர் நுழையமுயன்ற போது பாதுகாப்பு அதிகாரிகள் கோபமாக அவர் உள்ளே செல்வதை தடை செய்தனர்.
ஷாருகானின் மனைவி தனது பாசத்துக்கு உரிய கணவர் மீது கோபமாக இருந்தார் அதனால் பாதுகாவலர்களிடம் கூறி கான் வீட்டுக்குள் நுழைவதை தடை செய்து உள்ளார்.? அப்படியா ?
ஆனால் உண்மையில் நடந்தது என்ன...!
ஷாருகானின் பேன் (Fan) என்ற அடுத்த படத்திற்கா இந்த காட்சி படமாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் ஷாருகானுடைய தீவிர ரசிகர் வேடத்தில் ஷாருகான் மனீஷ் சர்மாவாக நடிக்கிறார்.படத்தின் இயக்குனர் பாண்ட் பாஜ் பாரத் பேன் படத்தை அதித்திய சோப்ரா யாஷ் ராஜ் பிலிம் பேனரில் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் சில காட்சிகள் மன்னாத்தில் ஷாருகான் வீட்டின் முன் எடுக்கப்பட்டது. புதிய தோற்றத்தில் இருந்த ஷாருகான் வீட்டிற்கு வெளியே பாதுகாவலர்களால் தள்ளப்படுவது போல் ஷூட்டிங் எடுக்கப்பட்டது. இந்த படம் வெளிநாட்டு சிறப்பு மேக்கப் மேன்களை கொண்டு ஷாருகானுக்கு மேக்கப் செய்து புதிய தோற்றத்தை கொண்டு வந்து உள்ளனர்.