
மும்பை ஐ.ஐ.டி.யில் 3-ஆம் ஆண்டு கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வருகிறார் ஆஸ்தா அகர்வால் (20). கலிபோர்னியாவில் கடந்த மே-ஜூன் மாதம் பேஸ்புக் நிறுவனத்தில் பயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது, அவரது திறமையை பாராட்டிய பேஸ்புக் நிறுவனம் ஃப்ரீ-பிளேஸ்மண்ட் முறையில் மாணவி ஆஸ்தாவுக்கு ரூ.2 கோடி ஆண்டுச் சம்பளத்தில் பணி ஆணை வழங்கியுள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
இதுபற்றி மாணவி ஆஸ்தா கூறுகையில், 'நான் சாஃப்ட்வேர் டெவலப்பராக வரவே விரும்பினேன். ஆனால், எனது திறமையை பார்த்த அவர்கள் உடனே வேலை தந்து விட்டனர். நான் அதற்கு சம்மதம் தெரிவித்ததும் வேலை உறுதிக் கடிதத்தை அனுப்பினர். வரும் அக்டோபர் மாதம் வேலையில் சேர உள்ளேன். சீக்கிரமாக 4-வது ஆண்டு படிப்பை முடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறேன்.' என்றார்.
ஐ.ஐ.டி. மாணவி ஆஸ்தா ஏற்கனவே கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூனியர் சயின்ஸ் இண்டர்நேஷனல் ஒலிம்பியாட்டில் ஆய்வை சமர்ப்பித்தவர். அவரது தாயார் ஷோபா அகர்வால், தனது மகள்களுக்கு நல்ல தரமான கல்வியை பெற்றுத் தர வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் வளர்த்ததாக பெருமிதத்துடன் கூறினார்.
சென்ற ஆண்டு கேம்பஸ் இண்டர்வியூவில் ஐ.ஐ.டி. மும்பை மாணவர்கள் 5 பேர் சுமார் 1.42 கோடி சம்பளத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
