உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.இதையடுத்து, இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களாக நிலவி வந்த முட்டுக்கட்டை நீங்கும் என்று தெரிகிறது.இதன்படி, உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், இதன் மூலம் உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் மானியம் 10 சதத்துக்கு மிகக்கூடாது என்ற உலக வர்த்தக அமைப்பின் வரம்புக்கு அதிகமாக இந்தியாவில் உணவு மானியம் வழங்கப்பட்டாலும், அதற்கு உலக வர்த்தக அமைப்பில் உள்ள நாடுகள் ஆட்சேபம் தெரிவிக்க இயலாது.வரும் சனிக்கிழமை, ஜி-20 நாடுகளுக்கிடையேயான இரு நாள் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், இந்த முன்னேற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.