குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில், உலகின் மிக உயரமான காற்றாலை கோபுரத்தை அந்த மாநில முதல்வர் ஆனந்திபென் படேல் வியாழக்கிழமை திறந்துவைத்தார். குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம் நானிபெர் கிராமத்தில் உலகின் மிக உயரமான, 120 மீட்டர் உயரமுள்ள காற்றாலை கோபுரத்தை சுஸ்ளோன் எரிசக்தி நிறுவனம் அமைத்துள்ளது. அதனைத் திறந்துவைத்து ஆனந்திபென் படேல் பேசியதாவது: ""குஜராத் மாநிலமானது காற்றாலை மூலம் மட்டும் 10,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் ஆற்றலுடையதாகத் திகழ்கிறது. மின் உற்பத்திக்குதான் குஜராத் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால்தான் இம்மாநிலம் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது'' என்று அவர் கூறினார்.