சொத்து குவிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 4 வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. 2 முறை ஜாமீன் கேட்டும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதனையடுத்து ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். அதில் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் ஜாமீன் கிடைத்தது. இது தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.
இதனையடுத்த நேற்று மாலை ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வந்தடைந்தார். அவருக்கு கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயல்லிதாவுக்கு தீபாவளி வாழ்த்து கூறினார். ஜெயலலிதா கார்டனுக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். அவர் உடல்நலத்துடனும், மன அமைதியுடனும் இருக்க வேண்டும் என்றார். இந்த வாழ்த்து செய்தியை அவர் கடிதம் மூலம் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார்.