இந்தியாவில் 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டி, 3 டெஸ்ட் போட்டிகளும் ஆடுவதாக இருந்தது. ஆனால் தொடர் தொடங்கியதில் இருந்தே மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பிரச்சனை செய்து கொண்டு இருந்தார்கள். அந்த அணி வாரியத்துடன் ஏற்பட்ட சம்பள பிரச்சனை தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. அந்த அணி வாரியம் இவர்களுக்கு சரியான சம்பளம் தராததால் இவர்கள் ஆரம்பம் முதல் பிரச்சனை செய்து வந்தார்கள். இதனை அடுத்து 4 வது ஒருநாள் போட்டி நடைபெறுவதாக இருந்தது. அதில் பங்கேற்க மாட்டோம் என மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் கடும் பிரச்சனை செய்தனர். பிசிசிஐ சமதானம் செய்த பிறகு ஆடுவதற்கு சம்மதம் செய்தது.
அதன் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி வாரியம் வீரர்களை திரும்பி வர சொல்லிவிட்டது. இதனால் தொடர் பாதியிலையே நிறைவுற்றது. இதனால் பிசிசிஐக்கு கடும் நஷ்டம் ஆகிறது. இதனால் அவர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். இது குறித்து முடிவெடுக்க 21 ஆம் தேதி செயற்குழு கூடுகிறது. அதில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் தொடர் வேண்டாம் என முடிவு எடுக்க போவதாக தெரிகிறது. அதோடு ஐபில் போட்டியில் விளையாட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு தடை விதிக்கலாம் என்னும் முடிவிலும் உள்ளார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.