இது தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. இதனையடுத்த நேற்று மாலை ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வந்தடைந்தார். அவருக்கு கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டது. அவர் வந்த இடம் எல்லாம் மக்கள் கூடி நின்று அவரை வரவேற்றனர். இதனை ஜெயா டிவியில் நேரலையாக காண்பித்தார்கள். அதில் வார்த்தைக்கு வார்த்தை மக்களின் முதல்வர் மக்களின் முதல்வர் என ஜெயலலிதாவை கூறினார்கள்.
ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்ததால் தான் பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்று கொண்டார். ஆனால் யாரும் அவரை முதல்வராக மதிப்பது இல்லை. ஏன் அவரே கூட தன்னை முதல்வர் என்று நம்ப மாட்டேங்கிறார். தீபாவளிக்கு சிறப்பு பேருந்து அறிவுப்பு வெளியிடுவதற்கு கூட புரட்சி தலைவி அம்மாவின் ஆணைக்கு இணங்க என உத்தரவு பிறப்பிக்கிறார். ஜெயா நியூஸ்ஸில் எப்போது பார்த்தாலும் மக்களின் முதல்வர் என்று தான் செய்தி வருகிறது. இது பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது.