இந்தியாவில் கால்பந்து விளையாட்டை உயிர்பிப்பதற்காக ஐஎஸ்எல் போட்டியை கொண்டு வந்தார்கள். இதில் 8 அணிகள் உள்ளன. அவைகளை சச்சின், கங்குலி, தோனி, கோலி, அபிஷக் பச்சன் போன்ற கிரிக்கெட் வீரர்களும் பாலிவுட் நட்சத்திரங்களும் அணிகளை வாங்கினார்கள். இதனால் பலரும் இதனை பார்க்க ஆரம்பித்தார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் முதல் போட்டி வரும் 21 ஆம் தேதி நடக்க உள்ளது. அதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கி விட்டது. அதனை நாம் ஆன்லைனிலு வாங்கலாம். நேரு விற்பனை மையத்திலும் டிக்கெட் விற்பனை நடக்கிறது . டிக்கெட் விலை ரூ. 100, 150, 200, 350 என மலிவாக தான் கிடைக்கிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் தோனியின் சென்னை அணியும் சச்சினின் கேரளா அணியும் மோதவுள்ளன. அதிக நபர்கள் வரவேண்டும் என்பதற்காக டிக்கெட் விலையை மலிவாக விற்கிறார்கள்.