ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடியில் சச்சின் மற்றும் திராவிட் ஜோடி தான் முதல் இடத்தில் இருந்தது . இவர்கள் இருவரும் இணைந்து 1999 ஆம் ஆண்டு நியு சிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 331 ரன்கள் சேர்த்தனர் . இது தான் சாதனையாக இருந்தது , இந்த சாதனையை தென் ஆப்ரிக்க வீரர்களான வான்விக் மற்றும் டெல்போர்ட் ஜோடி முறியடித்தது .
இந்தச் சாதனை தென் ஆப்ரிக்காவின் உள்நாட்டுப் போட்டிகளில் முறியடிக்கப்பட்டுள்ளது . டால்பின் மற்றும் நைட்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி நடந்தது . இந்தப் போட்டியில் டால்பின் அணியின் துவக்க வீரர்களாக இறங்கிய வான்விக் மற்றும் டெல்போர்ட் 50 ஓவர்கள் முழுவதும் பேட் செய்து 367 ரன்கள் எடுத்தனர் . இதற்கு முன் முதல் விக்கெட்டுக்கு பாகிஸ்தானின் குலாம் அலி மற்றும் சொஹைல் ஜாபர் இணைந்து எடுத்த 326 ரன்களே சாதனையாக இருந்தது .
வான் விக் - 175 (171) 4's-15,6's-5
டெல்போர்ட் - 169 (130) 4's-12,6's-6