உலக நாயகன் கமல் எப்படி தனது தசாவதாரம் படத்தில் எபோலா நோய் ( http://www.satrumun.net/2014/10/kamal-hasan-predicts-about-ebola-6-years-ago.html )குறித்து சொன்னாரோ அதேப் போன்று மேலும் சில சம்பவங்கள் நடைபெறும் முன்னரே தனது படத்தில் கூறி இருக்கிறார் . அவ்வாறு அவரது சில கணிப்புகளைக் கீழ்க் காணலாம் .
1) சுனாமி என்ற ஒரு வார்த்தை இருக்கிறது என்பது நமக்கு 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்படும் வரும் வரை நம்மில் பலருக்கு தெரியாது . ஆனால் சுனாமி என்ற வார்த்தையை கமல் தனது " அன்பே சிவம் " படத்தில் குறிப்பிட்டு இருந்தார் .
2 ) குஜராத்தில் நடந்த கலவரம் போன்றே ஹேராம் படத்தில் வைத்து இருந்தார் . ஹேராம் படம் வெளிவந்தது 2000 ஆம் ஆண்டு . குஜராத் கலவரம் நடந்தது 2002 ஆம் ஆண்டு .
3 ) தனது வேட்டையாடு விளையாடு படத்தில் இரு சைக்கோ கில்லர்கள் தொடர் கொலையில் ஈடுபட்டு இருப்பார்கள் . இந்த படம் வெளிவந்த பின் சில நாட்கள் கழித்து நொய்டா தொடர் கொலையில் மொஹிந்தர் , சதீஷ் என இருவர் மாட்டிக் கொண்டனர் .