வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்ட் இந்திய தொடரில் இருந்து தீடிரென்று விலகியதால் பிசிசிஐ அமைப்பு கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது . முதலில் இந்த பிரச்சனை இருந்தாலும் பின்னர் வீரர்கள் விளையாட ஒத்துக் கொண்டனர் . ஆனால் வெள்ளிக்கிழமை தீடிரென மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் போர்ட் வீரர்களை உடனடியாக திரும்பி வரும்படி வலியுறுத்தியது .
இது குறித்து பிசிசிஐ அதிகாரி சஞ்சய் படேல் கூறுகையில் , " மேற்கிந்திய கிரிக்கெட் போர்ட் தங்கள்து அணி வீரர்களுடன் இருக்கும் பிரச்சனையைக் காரணம் காட்டி விலகியுள்ளது . ஆனால் பிசிசிஐ இதனை சர்வதேச கிரிக்கெட் அமைப்பிடம் எடுத்துச் செல்ல உள்ளது . நாங்கள் இதனை சாதரணமாக விட மாட்டோம் , நாங்கள் அவர்களுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்புக் கொடுத்தோம் " என்றார் .
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் 5 ஒரு நாள் போட்டிகளிலும் , ஒரு டி-20 போட்டியிலும் , மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட ஒத்துக் கொண்டது . ஆனால் இப்போது 4 ஒரு நாள் போட்டிகளுடன் விலகிக் கொண்டது . இந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக இழப்பீட்டுத் தொகையாக 400 கோடி வரை பிசிசிஐ கேட்க உள்ளதாக தெரிகிறது . மேலும் இந்த பிரச்சனை ஐ.பி.எல் அமைப்பிடமும் எழுப்பப்படும் என தெரிகிறது இதனால் இவர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தடை செய்யப்படலாம் என தெரிகிறது .