ஜெயலலிதாவை பெங்களூர் அக்ரஹார சிறையில் இருந்து சென்னை சிறைக்கு மாற்றி அவரை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு செய்ய வேண்டும் என ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் அந்த மனு ஜெயலலிதா தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவல்ல. இது ஜெயலலிதாவின் வளர்ச்சி பிடிக்காதவர்களின் இன்னொரு மோசடி செயல் என அதிமுக தரப்பில் கூறியுள்ளார்கள்.
உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஜெயலலிதா மனு செய்துள்ள நிலையில், அவர் மீது நீதிபதிகள் மத்தியில் தவறான எண்ணத்தை விதைக்க வேண்டும் என்பதற்காக யாரோ செய்த சதிச் செயல் இது. ஜெயலலிதாவின் வழக்கு குறித்து அனைத்து வேலைகளையும் அவரது வழக்கறிஞர்கள் பார்த்து கொள்கிறார்கள். எனவே யாரும் அவருக்காக நீதிமன்றத்தில் மனு கொடுக்க வேண்டாம் என அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.