இந்திய மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இது 5 போட்டிகள் கொண்ட தொடர் ஆகும். முதல் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியடைந்தது. இந்த போட்டியில் தோல்விக்கு முக்கிய காரணம் இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது தான் .
இந்நிலையில் இந்திய வீரர் மோகித ஷர்மா காயமாகி உள்ளார். இதனால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுகிறார். அவருக்கு பதில் இஷாந்த் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான அடுத்த ஒருநாள் போட்டி டெல்லியில் சனிக்கிழமை நடக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலக கோப்பை நடைபெற உள்ளது. அதற்குள் நல்ல அணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.