சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என செப்டம்பர் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் அவருக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அதிமுக வினர் போராட்டம் என பொது மக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.
அவருக்கு தொடர்ந்து 2 முறை ஜாமீன் வழங்கப்படவில்லை . இந்நிலையில் தமிழ் நடிகை மாயா என்பவர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். சென்னையில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு தனது மகளுடன் வந்துள்ளார். அங்கு அவர் மண்ணெண்ணெய்யும் கொண்டு வந்துள்ளார். அதனை அவர்கள் இருவரும் ஊத்தி கொண்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி உள்ளார்கள். அவர்களை போலீஸார் தடுத்து விட்டார்கள். அவர்களிடம் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என விசாரித்த போது, ஜெயலலிதாவுக்காக தங்களது உயிரையும் கொடுக்க தயார் என கூறி உள்ளார்கள்.
மாயா கர்ஜனை , அமரக்காவியம் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.