BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 11 October 2014

இந்திய கால்பந்து புரட்சி இன்று தொடங்குகிறது !! மாற்றத்தை உருவாக்குமா ??

A much expected ISL is going to start today . Will it be able to bring a revolution in Indian football . The league which is formed in the same manner as the Indian hit IPL , is also a star studded league .The first match is between Kolkata and Mumbai . Final is scheduled on December 20 .

உலகில் உள்ள சிறிய நாடுகள் கூட கால்பந்தில் கலக்கி வருகின்றன. ஆனால் 120 கோடி மக்கள் தொகையை கொண்ட நம்மால் ஏன் சாதிக்க முடியவில்லை. மற்ற நாடுகள் ஆடும் போட்டிகளையே இந்திய ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கிறார்கள். இந்தியா விளையாடினால் பார்த்து ஊக்குவிக்க மாட்டார்களா என்ன. மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது.

இந்தியாவிலும் கால்பந்து வந்து விட்டது. ஐபில் போட்டிகளை இந்தியாவில் 8 அணிகளை உருவாக்கி உள்ளார்கள். இதில் ஒவ்வொரு அணியையும் கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் விலைக்கு வாங்கி உள்ளார்கள். சென்னை அணியை இந்திய கேப்டன் தோனியும் பாலிவுட் நடிகர் அபிஷக் பச்சனும் வாங்கி உள்ளார்கள். கேரளாவை சச்சின் வாங்கி உள்ளார். கொல்கத்தா அணியை வங்கத்து புலி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வாங்கி உள்ளார். கோவா அணியை விராத் கோலி வாங்கியுள்ளார். கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் அணிகளை வாங்கியுள்ளதால் இதில் பல புதிய கால்பந்து ரசிகரகள் உருவாகலாம்.

இதன் தொடக்க விழா இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் மும்பை அணியும் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் 2 முறை மோத வேண்டும். இறுதி போட்டி வரும் டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இனி இந்தியாவிலும் கால்பந்துக்கு என தனி ரசிகர்கள் இருப்பார்கள்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies