BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 11 October 2014

ஜெயலலிதா தண்டனை பெற்று சிறையில் இருக்கும் வேலையில் புதிய திட்டத்தை கையில் எடுத்து இருக்கும் திமுக !!

As Jayalalitha was convicted and jailed for amassing un-accounted wealth , DMK is planning to use this opportunity and get back their image in Tamil Nadu . They are going to implement this in Srirangam by-elections .


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புக்காக தான் திமுக பல ஆண்டுகளாக காத்து இருந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே  தீர்ப்பு வந்து விட்டது. ஆனால் அவர்களுக்கு வர வேண்டிய பயன் மட்டும் இன்னும் வரவில்லை.

ஜெயலலிதா சிறையில் இருப்பதை வைத்து அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி மக்களிடையே அனுதாபம் தேட நினைத்தனர். அதனை இப்போது திமுகவினர் புரிந்து கொண்டனர். அது நடந்தால் இந்த தீர்ப்புக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என புரிந்து கொண்டார்கள் .

அதனால் தான் கருணாநிதி தனது மவுனத்தை கலைத்து ஜெயலலிதா ஊழல் செய்து விட்டு தான் தண்டனை பெற்றுள்ளார் என கூறினார். இது குறித்து மக்களிடையே பிராச்சாரம் செய்யுமாறு கூறியுள்ளார். ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்து விட்டார்.

அதனால்  ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். இதனை வைத்து பல திட்டங்களை வைத்து உள்ளது திமுக. இந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை குற்றவாளி என கூறி திமுகவின் பிராச்சாரம் இருக்கும். ஸ்ரீரங்கம் அதிமுகவின் கோட்டை. இந்த தீர்ப்பு மக்கள் மனதை எந்த அளவு மாற்றி உள்ளது என்பது குறித்து இந்த தேர்தலின் மூலம் அவர்களால் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு ஏற்றவாறு 2016 தேர்தலுக்கு வியூகங்கள் அமைக்க முடியும். எனவே இந்த இடைத்தேர்தலுக்காக இப்போது இருந்தே வேலைகளில் இறங்கி விட்டது திமுக.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies