BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 11 October 2014

மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க புதிய ஆப் ஒன்றை உருவாக்க உள்ளார் மார்க் !!

Facebook CEO meets Indian Prime Minister Modi . They discussed a lot about digital expansion in the country . Zuckerberg also expressed his interest in working with Indian government . As Modi asked , Facebook will soon develop an app to Modi's "Swachch Bharath " Campaign .

இணைய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வியாழக்கிழமை அன்று இந்தியா வந்தார். அதன் பிறகு அவர் வெள்ளிக்கிழமை மாலை இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். அவர்கள் இருவரும் பல புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இது குறித்த தகவல்களை தனது பேஸ்புக் தளத்தில் மோடி வெளியிட்டு உள்ளார். இது ஒரு அருமையான சந்திப்பு என மோடி கூறியுள்ளார். மோடி அண்மையில் தொடங்கிய தூய்மை இந்தியா திட்டம் குறித்து மார்க்கிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளார். அதற்கு உதவும் வகையில் பேஸ்புக் மூலம் ஒரு செயலியை உருவாக்குமாறு கேட்டுள்ளார். இது தூய்மை இந்தியா திட்டத்தை பரப்புவதற்கு உதவும் என மோடி நம்புகிறார். மார்க்கும் விரைவில் இதற்காக ஒரு செயலியை உருவாக்கி தருவதாக கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த சுற்றுலா தலங்கள் குறித்த ஆர்வத்தை தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஊக்குவிப்பது, டிஜிட்டல் இந்தியா முயற்சி உள்ளிட்டவைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் இருவரும் ஆலோசித்தனர்.  மோடிஜி புதிய முறையில் ஆட்சி செய்து வருவது இளைஞர்கலை வெகுவாக கவர்ந்து உள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies