செப்டம்பர் 28 ஆம் தேதி ஜானவி என்னும் மூன்று வயது குழந்தை தங்கள் பெற்றோருடன் இந்தியா கேட்டை சுற்றி பார்க்கையில் காணாமல் போனது . இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் தங்களால் முடிந்த வரை விளம்பரம் கொடுத்து குழந்தையைத் தேட தொடங்கினர் .
இறுதியில் அக்டோபர் 5 ஆம் தேதி தங்கள் மகளை மொட்டை அடித்த நிலையில் கண்டுபிடித்தனர் . இதற்காக அவர்கள் பல இலட்ச ரூபாய்களை செலவு செய்தனர் .
இது குறித்து அந்த குழந்தையின் அம்மாவின் சகோதரர் கூறுகையில் , " நாங்கள் பல பேர் ஒவ்வொருவரும் ஒரு வேலையைச் செய்தோம் . ஒருவர் அமைச்சரைப் பார்க்கவும் , ஒருவர் போலிசுடன் பணி புரியவும் , ஒருவர் பேஸ்புக் மற்றும் வாட்ஸப்பில் விளம்பரம் செய்தோம் . இந்த விளம்பரம் மூலம் ஜானவி குறித்த தகவல் பலருக்கு அனுப்பப்பட்டது . பேஸ்புக் விளம்பரத்துக்கு காசு கொடுப்பதன் மூலம் , பல பயனாளர்களுக்கு இந்த விளம்பரம் சேர்க்கப்படும் . இதற்கு அவர்கள் பெரும் செலவு செய்தனர் .
இந்த விளம்பரம் பரவி வருவதைப் பார்த்த குழந்தையை எடுத்தவர்கள் பயத்தில் அந்த குழந்தையை விட்டுவிட்டார்கள் . பின்னர் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் .