ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு செய்தார்கள். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவுக்கு எதிராக இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானால் அவர் வழக்கின் போக்கை மாற்றக் கூடும் என எதிர்தரப்பு வாதாடினர் . அரசு தரப்பில் வாதாடிய பவானி சிங் அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை என தெரிவித்தார்
நீதிபதி ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய அவசியம் இல்லை என்றும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தார் . அதோடு ஜெயலலிதாவுக்கு ஜாமீனும் வழங்கவில்லை. இது கர்நாடக அரசின் திட்டமிட்ட சதி என அதிமுக வினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களுக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரும் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வழக்கு அம்மாவின் அரசியல் வாழ்க்கையை முடிக்க அவரது எதிரிகள் செய்துள்ள திட்டமிட்ட சதி என்றும் கூறினார்.