நமது உறவினர்களோ அல்லது நண்பர்களோ தெரிந்தவர்களோ என யாராவது இறந்து விட்டால் அவர்கள் இறுதி சடங்குக்கு சென்று விட்டு குளித்து விட்டு தான் வீட்டுக்குள் வருவோம் . இது பண்டைய கால பழக்கம். வெளியில் ஆறு ஏரி போன்றவை இருந்ததால் அங்கு குளித்து விட்டு வருவார்கள். பெண்கள் வீட்டின் பின்பக்கமாக உள்ளே வந்து அங்கே குளித்து விட்டு உள்ளே வருவார்கள். இது இன்றைய காலத்தில் சாத்தியம் இல்லாமல் போனது. ஆனால் யாரும் சாவு வீட்டுக்கு போய் விட்டு குளிப்பதை நிறுத்திவிட வில்லை. வீட்டுக்குள் வந்தவுடன் யாரையும் தொடாமல் முதல் வேலையாக குளிக்க தான் செல்கிறார்கள். இந்த வழக்கத்தை ஏன் கடைப்பிடிக்கிறார்கள். உண்மையான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
ஒருவர் இறந்தவுடன் அவரது உடலில் இருந்து பல ஆயிரம் விஷ கிருமிகள் வெளியேறும். இது அங்கு சென்று இருக்கும் நம்மை தாக்கும் . இதனை உடனடியாக அப்புறபடுத்த வேண்டும். இல்லையெனில் அது பாதிப்பை ஏற்படுத்தும். அதற்காக தான் சாவு வீட்டில் இருந்து வந்தவுடன் குளிக்கிறார்கள். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கு. நமக்கு நெருங்கியவர்கள் இறந்துவிட்டால் நாம் மனதளவில் பாதிக்கப்பட்டு உடலளவில் சோர்வு அடைவோம். அப்போது குளிர்ந்த நீரில் குளிக்கும் போது நாம் புத்துணர்ச்சி பெறுவோம். அதற்காகவும் குளிக்க சொல்கிறார்கள்.
இதனை வெளிப்படையாக சொன்னால் யாரும் குளிக்க மாட்டார்கள். அதனால் தான் நம் முன்னோர்கள் , பேய்கள் பிடித்து கொள்ளும் என நம்மை பயமுறுத்தி நம்மை குளிக்க வைத்தார்கள். நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயல்களிளும் பல காரணங்கள் உள்ளது. நாம் தான் அதனை சரியாக புரிந்து கொள்வது இல்லை.