நேற்று நடந்த சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கொல்கத்தா அணியில் சுனில் நரேன் இல்லாதது அந்த அணியின் பவுலிங்கில் நன்றாகவே தெரிந்தது. அதனால் சென்னை அணியால் எளிதில் வெற்றி பெற முடிந்தது. அவரது பந்துவீசும் முறை தவறாக உள்ளது என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் பந்து வீச அனுமதிக்கப்படவில்லை.
இந்திய அணி அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் வரும் 8 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து சுனில் நரேன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது பந்துவீச்சு முறையை சரி செய்து கொள்வதற்காக நேரம் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் கூறியுள்ளது.
இதனால் அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு கிளம்பினார். அடுத்து தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட உள்ளார். அதற்கு அடுத்து தனது பந்துவீசும் முறை குறித்து ஆய்வு செய்ய உள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் நரேன் இல்லாதது அந்த அணிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும்.