சில நேரங்களில் சமூக வலைதளங்களில் உங்களின் வியாபாரத்துக்கோ அல்லது உங்கள் பக்கத்திற்கோ அதிக லைக் வாங்கி தருகிறேன் என்ற பெயரில் விளம்பரம் வரும் . இவ்வாறு வரும் அனைத்து விளம்பரங்களும் பொய் என்பதால் இவர்களை நீக்குவது குறித்து பேஸ்புக் நிறுவனம் யோசித்து வருகிறது .
இதற்காக பேஸ்புக் தனி திட்டம் ஒன்றை உருவாக்கி இது போன்ற பொய்யாக லைக் வாங்குபவர்களை தடுக்க திட்டமிட்டு வருகிறது .
இது குறித்து பேஸ்புக் அதிகாரி மாட் ஜோன்ஸ் கூறுகையில் , " இவர்கள் அனைவருக்கும் பணம் சேர்ப்பது தான் குறிக்கோளாக இருக்கிறது . பக்கத்திற்கு அதிக லைக் வாங்கி தருகிறேன் என்று கூறுபவர்கள் பதிலுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை . இது போன்று லைக் வருவதனால் தங்கள் வியாபாரத்துக்கு எந்த இலாபமும் இல்லை என்று உணராதவர்களே இது போன்ற தாக்குதலுக்கு ஆளாகின்றனர் . இது போன்று ஏமாற்றுபவர்கள் மீது இனி தீவிர நடவடிககி எடுக்கப்படும் " என்றார் .