எப்போதாவது உங்கள் சிப்ஸ் பாக்கெட்டில் அதிக அளவு காற்று தான் இருக்கிறது என வருத்தம் அடைந்து இருக்குறீர்களா ?? அப்படி வெறுப்படைந்த சில கொரியர்கள் , கொஞ்சம் அறிவியலை சேர்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் .
தென் கொரியாவில் சிப்ஸ் பாக்கெட்டில் அதிக அளவு காற்று இருப்பதால் , இதை எதிர்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் . 160 சிப்ஸ் பாக்கெட்டை வாங்கிய அவர்கள் அதனை ஒன்றாக வைத்து கப்பல் போன்ற ஒன்றை அமைத்தனர் . திறக்கப்படாத 160 பாக்கெட்களை ஒன்றிணைத்து செய்த இந்த கப்பலில் இரண்டு பேர் அமர்ந்து பயணம் செய்தனர் . இவர்கள் இந்த சிப்ஸ் கப்பலில் 1.3 கிமீ பயணித்தனர் .
இந்த நிறுவனங்கள் அளித்த அறிக்கையின்படி , ஒரு குறிப்பிட்ட அளவு நைட்ரஜன் வாயு இருந்தால் தான் உள்ளே உள்ள சிப்ஸ் பாதிப்படையாமல் இருக்கும் .