காலம் காலமாக வரை முறையின்றி இயற்கை வளத்தை அழித்ததன் காரனமாக, சுற்றுச் சூழலை மாசுபடுத்தியதற்கான பலனை தற்போது அன்பவிக்கத் தொடங்கியிருக்கிறோம். உலகத்தின் வெப்பநிலை உயரத் தொடங்கியிருப்பதன் விளைவை இனிமேல் இன்னும் கடுமையாகச் சந்திக்கப்போகிறோம்.
இப்பிரச்சினையில் இப்போதுதான் விழித்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள், பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவற்றில் ஒன்று, வீணான நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் மரங்களை வளர்த்துக் காடுகளை உருவாக்குவது. இதற்கு, கியோட்டோ பருவ நிலை மாநாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐ.நா.வும் ஆதரவு அளிக்கிறது. மரங்கள், 'ஒளிச்சேர்க்கை' மூலம் காற்றில் உள்ல கார்பன்-டை-ஆக்சைடை பெருமலவில் உறிஞ்சிக் கொள்ளும் என்று கருதப்படுகிறது. ஆனால் இதைவிட இன்னும் தீவிரமாக அதிகப் பரப்பில் காடுகளை உருவாக்கினாலும் அதனால் பசுமைக்கூட வாயுக்களுக்கு எதிராக பெரிதாகப் பயனிருக்காது என்று கண்டுபிடித்துக் கூறுகிறார்கள், சுர்றுச்சூழல் ஆய்வாளர்கள்.
மரங்களை வளர்ப்பது இப்பிரச்சினையில் ஓரளவுதான் கை கொடுக்கும். காரணம், செடிகள் மரமாக வளரப் பல ஆண்டுகள் ஆகின்றன. கார்பன்-டை-ஆக்சைடு மூலக்கூறுகளோ நீடித்திருக்கக்கூடியவை. எனவே பல நூற்றாண்டுகளுக்கு அவற்றின் தாக்கம் இருக்கும் என்கிறார்கள், ஆய்வாளர்கள். இது தொடர்பான ஆய்வில், பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விவேக் அரோரா, நோவா ஸ்காட்டியா பல்கலைக்கழகத்தின் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் ஈடுபட்டனர். இவர்கள் கூறும் போது, "உலகின் 50 சதவீத நிலப்பகுதியைக் காடுகளாக மாற்றினால்கூட, உலக வெப்பமயமாதலுக்கு அது பெரிதாகத் தடை போடாது. அப்படியை செய்வதாக இருந்தாலும், விளைநிலங்களை எல்லாம் காடுகளாக மாற்றுவது சாத்தியமில்லை. காரணம், அதிகரித்து வரும் மக்கள் தொகைதான்" என்கிறார்.
காடு வளர்ப்பால் பொதுவாக நன்மைதான். என்றாலும், அது மட்டுமே உலகத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது என்பது இதில் இருந்து தெரிகிறது. இருந்தாலும் நாம் மரம் வளர்த்து காடுகள் அமைப்போம்.