ஆப்பிளின் ஐபோன் - 6 சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது . வெளிவந்தவுடனே மொபைல்கள் வளைந்து விடுவதாக பலர் குற்ற்ஞ்சாட்டினர் . இப்போது ஆப்பிளுக்கு புதிய பிரச்சனை வந்துள்ளது . மொபைல் பேசும் போது தலை முடியினை பிடித்து இழுப்பதாக வாடிக்கையாளர்கள் குறை கூறி வருகின்றனர் .
ஆப்பிளுக்கு பிரச்சனை என்றால் முதலில் அது வெளிவருவது டிவிட்டரில் தான் . ஆப்பிள் வளைந்த போது #bendgate என்ற ஹேஷ்டேக் பிரபலமானது . இப்போது #hairgate என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது .
ஒரு பயனாளர் கூறுகையில் , " நான் ஒவ்வொரு முறை கால் பேசும் போதும் என் முடியை பிடித்து இழுக்கிறது " என்றார் .
முந்தைய வளையும் பிரச்சனையின் போது நார்மலாக மொபைலை பயன்படுத்தினால் , வளைவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு , புதிதாக வர இருக்கும் மொபைல்களில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என்றனர் .
இப்போது இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் கூற இருக்கின்றனர் என தெரியவில்லை