சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வேண்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வேண்டி மனு தாக்கல் செய்தார்கள். அந்த வழக்கின் விசாரணைக்கு பிறகு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கவில்லை என தீர்ப்பு வந்தது. இதனால் அவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். கடைசி வாய்ப்பாக உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளார்கள். அதிலும் ஜாமீன் கிடைக்கவில்லை இல்லையென்றால் மேல்முறையீடு செய்து விட்டு காத்து இருக்க வேண்டியது தான்.
இன்று மாலை 5.30 மணி போல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். மனு எப்போது விசாரணைக்கு வருகிறது என்று நாளை தெரிய வரும். அடுத்து 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தீபாவளி விடுமுறை வருகிறது. அதனால் அதற்கு முன்பாக ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்க வேண்டும் அதிமுக வழக்கறிஞர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
பார்ப்போம் அம்மாவுக்கு தீபாவளி ஜெயிலிலா அல்லது வெளியிலா என்று ??