பிக் பில்லியன் டே சேலினால் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு தலைவலி கூடிக் கொண்டே இருக்கிறது . சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருள் கொடுக்க முடிந்தது . மற்றவர்களுக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியது . இப்போது இந்த கடிதம் மட்டும் போதாது என்ற நிலையில் அவர்கள் இருக்கின்றனர் . அவர்களுக்கு புதிய பிரச்சனையாக சாம்சங் , சோனி . எல்.ஜி போன்ற முன்னனி நிறுவனங்கள் ப்ளிப்கார்ட்டின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர் .
சில நிறுவனங்கள் தங்களின் பொருட்களை இந்த தளம் மூலம் விற்பதையும் நிறுத்தியுள்ளனர் . மேலும் சிலர் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் யோசனை செய்து வருகின்றனர் .
இது குறித்து முன்னனி நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " ப்ளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் எங்களால் நியமிக்கப்படாத டீலர்கள் மூலம் பெறப்பட்ட பொருட்கள் . அந்த பொருட்களுக்கு நாங்கள் எப்படி வாரண்டி தர முடியும் " என்றார் . இன்னொருவர் , " இந்த அதிரடி தள்ளுபடி பல வியாபாரிகளின் வியாபாரத்தை பாதித்துள்ளது . எனவே இது போன்று இனி நடக்காது என பிளிப்கார்ட் நிறுவனம் உறுதியளிக்கும் வரை அந்த நிறுவனத்துக்கு பொருட்கள் தரப்பட மாட்டாது என நிறுவனங்கள் கூறியுள்ளனர் " என்றார் .
பிளிப்கார்ட் இதற்கு என்ன செய்யப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ..