BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 8 October 2014

இளநீரினால் ஏற்படும் பயன்கள்


இயற்கையன்னை நமக்கு கொடுத்த சிறந்த குடி நீர் இளநீர். இது நமக்கு இயற்க்கையின் வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம். இளநீரை சுவைக்காக உபயோகப்படுத்தும் பானம் என்று சொல்லமுடியாது. உலகில் சிறந்த இயற்கை மூலிகை பானமாக கூறப்படுகிறது.
இளநீரின் பலன்களைப்பற்றி சில குறிப்புகள்.
 இளநீர் நம் உடலை குளுமையாகவும், சரியான தட்பவெப்ப நிலையிலும் வைக்கிறது. இளநீர் ஒரு நோய் தடுப்பாற்றல் பானமாகும் இளநீரில் "மோனோலாரின்" என்னும் நோய் தடுக்கும் மருந்து உள்ளது. இதனால் நோய்தடுக்கும்சக்தி இதை குடித்தவுடன் நம் உடலில் பரவுகிறது. மேலும் ஒரு செல் உயிரினங்களினால் ஏற்படும் நோய்கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் கொடுமையான நோயாகிய ஹெச்ஐவி, ப்ளு போன்ற நோய்களில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி இளநீரில் உள்ளது. சிறு நீரகத்தில் ஏற்படும் அனைத்து நோய்களிலிருந்து இளநீர் நம்மை பாதுகாக்கிறது. சிறு நீரகத்தில் உண்டாகும் கற்களை கரைப்பதற்கு இது சிறந்த மருந்து.
 குழந்தை பருவத்தில் அதாவது 1முதல் 3வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அனைத்து விதமான வயிறு சம்பந்தப்பட்ட நோய், புழுக்கள் பரவுதல் ஆகியவற்றைத் தடுக்கிறது. சிறு நீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீரை உட்கொள்வதால் சிறந்த பயன் அடையலாம்.மலேரியா, டைபாய்டு, வாந்தி போன்றவற்றை கட்டுப்படுத்தும். உடம்பு எடை அதிகாமா உள்ளவர்கள் இளநீரை உட்கொள்வதன் மூலம் எடையைக் குறைக்கலாம். இளநீரில் ஆக்கசக்கிகள் அதிகம்க உள்ளது.

இளநீரில் உள்ள வேதிப் பொருட்களின் அளவு

மொத்த திடப்பொருள் கி  % 6.5
குளுக்கோஸ், பிராக்டோஸ் மி.கி % 4.4
தாதுப்பொருட்கள் மி.கி  % 0.6
புரதச்சத்து  மி.கி % 0.01
கொழுப்புச்சத்து மி.கி % 0.01
அமிலத்தன்மை மி.கி 4.5
பொட்டாசியம் மி.கி % 290.0
சோடியம் மி.கி % 42.0
கால்சியம் மி.கி % 44.0
மக்னீசியம் மி.கி % 10.0
பாஸ்பரஸ் மி.கி % 9.2
இரும்புச்சத்து மி.கி % 106.0
காப்பர் மி.கி % 26.0

100 கிராம் இளநீரில் கொடுக்கும் கலோரி  அளவு 17.4
இளநீரின் இயல்புகள்
· இனிப்புச் சுவை நிறைந்தது.
· குளுமை தரக்கூடியது.
· எளிதில் ஜீரணமாகக்கூடியது.
· பித்த வாதத்தை குணப்படுத்தும் தன்மையுடையது.
· பசியைத் தூண்டக்கூடியது
· நீர்ப்பெருக்கியாக செயல்படக்கூடியது.
· புத்துணர்வு தரக்கூடியது.
· உடல் வெப்பத்தைத் தணிக்கக்கூடியது.
· உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறையைப் போக்கும் தன்மை கொண்டது

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies