BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 4 October 2014

7 ஆண்டுகள் கழித்து விஜய் டிவியில் நடந்த பொய் சண்டை பற்றிய உண்மை வெளிவந்துள்ளது, டிஆர்பிக்காக என்ன வேண்டும்னாலும் செய்வாங்களா ??

2006  ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த நிகழ்ச்சி ஜோடி நம்பர் 1 ஆகும். அது இப்போது பல சீசன்களை கடந்து விட்டது. அது முதன் முதலில் தொடங்கியது 2006 ஆம் ஆண்டு தான். அந்த சீசனில் பிரேம் பூஜா ஜோடி வெற்றி பெற்றது.


அதற்கு அடுத்த சீசன் 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. அதில் நடுவர்களாக சிம்பு, சங்கீதா, சுந்தரம் மாஸ்டர் ஆகியோர் இருந்தனர். அந்த சீசனில் அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி பயங்கரமாக உயர்ந்தது. அதற்கு முக்கிய காரணம் அதில் ஒரு எப்பிசோடில் சிம்புவுக்கும் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிருத்திவிராஜூக்கும் கடுமையான சண்டை. அந்த சண்டையை அப்படியே டிவியில் காண்பித்தார்கள் விஜய் டிவியினர். இதனால் அந்த நிகழ்ச்சிக்கான மவுசு அதிகரித்தது.

அந்த சண்டைக்கு என்ன காரணம் என்று பார்ப்போம். அன்றைய எப்பிசோடில் பிருத்விராஜூம் அவரது ஜோடியான உமா ரியாஸ் கானும் நடனம் ஆடினார்கள். அதில் பிருத்திவிராஜின் நடனம் நடுவர்களுக்கு பிடிக்கவில்லை. நடிகர் சிம்பு இதனை வெளிப்படையாக கூறி விட்டார். இதனால் பிருத்திவிராஜ் கோபமாகி விட்டார். அது எப்படி நான் ஒழுங்காக ஆடவில்லை என்று நீங்கள் கூறலாம். உடனே சிம்பு நன்றாக ஆடியதாக கூறிய போது ஏற்று கொண்டவர்கள் ஏன் இப்போது ஏற்று கொள்ள மாட்டேங்கிறீர்கள்.

பிருத்திவிராஜ் நிறுத்தாமல் பேசி கொண்டே இருந்ததால், சிம்பு கடுப்பாகி விட்டார். எனக்கு நடிக்க தெரியாதுங்க , ஆக் ஷன்னு சொன்னாதாங்க எங்கப்பா நடிக்க சொல்லி கொடுத்து இருக்கிறார் என்று சிம்பு கூறினார். இதனை வைத்து சிம்புவை இன்று வரை கலாய்த்து வருகிறார்கள். சிம்பு கோபித்து கொண்டு வெளியே சென்று விட்டார். அவரை சமாதான படுத்தி கொண்டு வர ஒரு பட்டாளேமே வெளியே சென்றது. திவ்யதர்ஷினி ஆகியோரின் கடும் முயற்சிக்கு பிறகு சிம்புவை உள்ளே அழைத்து வந்தார்கள்.

சிம்பு உள்ளே வந்ததும் பிருத்திவிராஜ் கோபித்து கொண்டு போட்டியை விட்டே வெளியேறி விட்டார். இதனால் உமா ரியாஸ் கானும் வெளியேறி விட்டார். இந்த சண்டை தான் ஒரு வாரத்துக்கு தமிழநாடு முழுவதும் பேசப்பட்டது. எல்லாரும் இந்த சண்டை உண்மை என அனைவரும் நம்பினார்கள். இப்போது அது பற்றிய உண்மை வெளி வர தொடங்கி உள்ளது. இது தொடர்பாக பிருத்திவிராஜ் ஒரு தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து உள்ளார்.



அன்று நடந்தவை எல்லாம் நடிப்பு தான், அவை அனைத்தும்  டிஆர்பிக்காக நடத்தப்பட்டது என்னும் உண்மையை கூறியுள்ளார். அன்று மட்டும் விஜய் டிவியின் டிஆர்பி பயங்கரமாக உயர்ந்தது. இதற்கு முன் எந்த தமிழ் நிகழ்ச்சிக்கும் அந்த அளவு டிஆர்பி உயர்ந்தது இல்லை. இது போன்று சண்டை நடக்கும் போது யாரும் சண்டையை நிறுத்துங்கன்னு சொல்ல மாட்டாங்க, ‘சார் லைட் இருக்கு. அங்க நின்னு சண்டை போடுங்க.. மைக் சரியா வைச்சு சண்டை போடுங்க'ன்னுதான் சொல்வாங்க.  மக்களை ஈர்க்க சண்டை இதுல எங்க நிஜம் இருக்கும்..? நடிக்கன்னு வந்துட்டோம்.. மக்களை ஈர்க்க ஏதாவது பண்ணித்தானே ஆகணும்..?"

அந்த சம்பவம் முடிந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு அது பற்றிய உண்மை இப்போது வெளிவந்துள்ளது. இது விஜய் டிவியில் மட்டுமில்லை, ஜீ டிவியில் நடக்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியிலும் இது போன்று தான் நடக்கிறது என்னும் உண்மையை போட்டு உடைத்தார். 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies