ஹிருத்திக் ரோஷன் , கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகி இருக்கும் படம். பேங் பேங் ஆகும். இதனை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இது நைட் அண்ட் டே என்னும் ஆங்கில படத்தின் ரீமேக் ஆகும்.
அக்டோபர் 2 ஆம் தேதி அன்று வெளிவந்த இந்த படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்போது வரை 250 கோடி ரூபாய் கலெக்ஷன் பெற்றுள்ளது. இந்தியாவில் ரூ.135 கோடியும், வெளிநாடுகளில் ரூ.57.25 கோடியும் வசூல் செய்து உள்ளது. இன்னும் சில நாட்களில் 300 கோடி ரூபாய் வசூல் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது பாலிவுட்டில் எந்த முன்னணி ஹீரோவின் படம் வந்தாலும் அசால்ட்டாக 250 கோடி ரூபாய் வசூலை பெற்று விடுகிறது. தூம் 3 படத்தின் வசூலை முறியடிக்குமா என பொறுத்து இருந்து பார்ப்போம்.